Enthan Kavithai
Friday, July 12, 2013
விழிச்சிறை
காதலி கண்ணில்
கரு மை கரைக்க -
காதலன் கட்டுண்டு
கிடக்கிறேன் கண்ணியின்
கருவிழியில்!!
Tuesday, July 2, 2013
தனிமை
உன்னை உன்னகே
அறிமுகம் செய்யும்
உடன்பிறப்பு!!
கருவறை முதல்
கல்லறை வரை
பயணத்தோழன்!!
எவன் விட்டுச்
சென்றாலும் இவன்
பிரியாதிருப்பவன்!!
அவள் இல்லாத
காரணமோ எனக்கு
இந்தக் கொடுமை - தனிமை!!!
Friday, May 24, 2013
வேள்வி
பதில் சொல்லத் தெரியாமல்
தவிக்கிறேன் நான்!
தேவதை கேட்கிறாள்
எப்பொழுது கல்யாண வேள்வி?
எப்படி சொல்வேன் -
கடவுள் கேட்பதில்லை
திருவிழா என்றென!!
Sunday, May 19, 2013
ஏக்கம்
பேச நினைக்கும் நேரத்தில்,
கைக்கெட்டா தூரத்தில் நீ..!
உன்னை நினைக்கும் நேரத்தில் -
என் அருகில் நீ..!
கனவுகளில் தான்
வருவாய் என்றால் -
எனது உயிரையும்
செலவு செய்வேன்..!
Sunday, April 14, 2013
சித்திரைக்கனி
நாள்தோறும் எனக்கு
வருடப் பிறப்பே..!!
நித்தம் எந்தன்
கனியை - கண்
விழித்ததும் காண்பதால்!!!
Saturday, April 13, 2013
கல்யாணம்
எல்லா உடன் பிறப்புகளும்
சேர்ந்து இருப்பது இல்லை!
தனிமைப் படுவதும் உண்டு,
பிரிவும் உண்டு - சிலர்
எதிரிகள் கூட ஆவர்!!
காதலும் கல்யாணமும் போல்!!!
ஊடல்
ஊடலும் காதலின் ஓர் அங்கமே,
ஊடலின் பின் வருமாம் கூடல் -
கவலை வேண்டாம் என் தங்கமே!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)