Enthan Kavithai
Sunday, April 14, 2013
சித்திரைக்கனி
நாள்தோறும் எனக்கு
வருடப் பிறப்பே..!!
நித்தம் எந்தன்
கனியை - கண்
விழித்ததும் காண்பதால்!!!
Saturday, April 13, 2013
கல்யாணம்
எல்லா உடன் பிறப்புகளும்
சேர்ந்து இருப்பது இல்லை!
தனிமைப் படுவதும் உண்டு,
பிரிவும் உண்டு - சிலர்
எதிரிகள் கூட ஆவர்!!
காதலும் கல்யாணமும் போல்!!!
ஊடல்
ஊடலும் காதலின் ஓர் அங்கமே,
ஊடலின் பின் வருமாம் கூடல் -
கவலை வேண்டாம் என் தங்கமே!!!
Monday, April 8, 2013
ஜுரம்
என் பார்வை தீண்ட -
உனக்கு ஜுரம் கண்டது!!
என்ன நான் செய்வேன் -
பார்த்தால் பசி தீருமா..?!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)