Enthan Kavithai
Wednesday, November 23, 2011
கவிதை
காண்பதற்கு இனிய ஓவியமே,
உன்னைக் கண்ட போது-
நான் உளறிய வார்த்தைகள்
ஆயின - கவிதை..!
Sunday, November 20, 2011
அழகி..!
ஒப்பனை இல்லா அழகியே -
உன் அழகிற்கு - உலகில்
ஒப்பு இணை இல்லை.
Thursday, November 17, 2011
வலி
தேர்வுகளின் பின்
முடிவுகளுக்காக எதிர்பார்ப்பதும் -
பிரசவ வலி தான் -
மாணவர்களுக்கு...!
Tuesday, November 15, 2011
ஆயுதம்
கண்டுகொண்டேன் இன்று -
அஹிம்சையால் உயிரை எடுக்கும் ஆயுதம் -
மௌனம்....!
Sunday, November 13, 2011
கவிதையே நீயடி..!
சின்னப்பெண்ணே,
என் கவிதையே நீயடி,
நீ அதன் விளக்கம் கேட்பது ஏனடி...!
Saturday, November 12, 2011
மழலை மொழி
அழகிய நக்ஷதிரங்களே...!
மஞ்சள் பூசுவதை நிறுத்துங்கள்,
எந்தன் அம்புலி மாமாவிற்கு
உங்களால் மஞ்சள் காமாலை -
பௌர்ணமி...!
Wednesday, November 9, 2011
நான் எழுதுகிறேன்
என் அன்பே,
அன்று எழுதினேன் உனக்கு பிடித்ததால்,
இன்றும் எழுதுகிறேன் -
உனக்கு பிடித்ததால் - வேறொருவனை..!
Monday, November 7, 2011
முதல் பாடம்..!
சுண்டு விரலளவே உள்ள எழுதுகோல்,
வேண்டாம் என வீசி எறிந்தேன் -
எடுத்தான் குப்பை அள்ளும் சிறுவன்,
சுண்டு விரலோடு சேர்த்துப்பார்த்தான்,
வைத்தான் சிரித்துக்கொண்டே சட்டைப்பையில் -
கற்றுக்கொண்டேன் முதல் பாடம் -
ஏக்கத்தின் வெளிப்பாடு - சிரிப்பு :(
Saturday, November 5, 2011
தமிழச்சிக்கு...!
அகரமும் அவதி - அன்பே நீ கோபம் கொண்டால்,
சிகரமும் சிறியது - உன்னை தேடிச் செல்லும்போது,
தகரமும் தங்கம் - ரசவாத ரகசியம் உன் காதில் ,
நகரமும் நரகம் - நீ இல்லாதபோது,
ழகரமும் கலங்குதடி - உந்தன் வடிவைக் கண்டு..!
Tuesday, November 1, 2011
ஒப்பிலக்கணம்..!
தேய் பிறை இல்லாக் காலம்,
மனம் பறவையாய் பறந்த தருணம்,
செய்த சேட்டைகள் - மன நினைவில்,
விழியின் ஓரம் - கண்ணீர் துளியில் -
கல்லூரி வாழ்வும் காதல் வீழ்ச்சியும்!
பசி..!
என் செல்லமே !
நீ இருக்கும் வரை உன்னோடு தான்,
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் -
பசி..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)