Enthan Kavithai
Sunday, October 21, 2012
தவம்
நீ இன்றி இரவெல்லாம் கண்விழித்தேன்,
விடியலாய் நீ வருவாய் என,
விடிந்தும் ஏன் நீ வரவில்லை,
விழியின் தவம் போதவில்லை என்றோ!!??
தவிப்பு
தகிக்கிறது உள்ளம் - உன்னை
நீங்கி விலகி நிற்பதால்,
தலைகோத வருவாயா - இல்லை
தலை சாய்ந்ததும் வருவாயா..!!?
Friday, October 5, 2012
பசலை
என்
கோப(வை) கிளியே,
உந்தன் உடல் உருக -
காரணம் மேகம் இல்லை!!
காதலன் தனை பிரியும்,
தலைவிக்கு வரும் இது-
கொடிய நோய் பசலையாம்
!!!
Monday, October 1, 2012
வரம்
வருடம் ஒரு முறை பூஜை,
வாரம் ஒரு முறை விரதம் - இருந்தாய்
வரனாய் நான் வர வேண்டி..!
தமிழில் எண்கள் இல்லை- நான்
தவம் செய்த காலம் உரைக்க -
வரமாய் தேவதை - நீ வர வேண்டி..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)