Sunday, December 16, 2012

காதல் சிறை

கப்பலில் வாடி,
கடலில் தேடினேன்,
காதல் கன்னியை..!

திக்கு தெரியாமல்,
பித்தென ஆனேன்,
அவளைக் காணாமல்..!

தூரத்தில் விடிவெள்ளி,
மின்னியது அவளொளி,
பின்தொடர்ந்தேன் அவளை..!

கரையைச் சேர
வழியில்லை- சிறையில் 
எந்தன் தேவதை..!

மாயனவன் பிடியினை 
நீக்க மன்னன் -
நான் வருகிறேன்..!  

சிறை மீட்கும் 
நேரம்வரை - காத்திரு
சின்ன பெண்ணே..!


Friday, November 23, 2012

காதல் சுவை

கடல் நீரில் பிறந்த   
உப்பு - உவர்க்கும் கல்வி பாடத்தில்,
உன் வியர்வையில் பூத்த 
உப்போ - இனிக்கிறது நம் காதல் பாடத்தில்..! 

தூரம்

நம் இருவருக்கும் இடையில்
பல்லாயிரம் மையில்கள் - கொடிதன்று,
பேசாமல் அமைதியாய் கழியும் 
கன நொடி நேரம்  -
கொடிதினும் கொடிது..!!! 

Sunday, October 21, 2012

தவம்

நீ இன்றி இரவெல்லாம் கண்விழித்தேன்,
விடியலாய் நீ வருவாய் என,
விடிந்தும் ஏன் நீ வரவில்லை,
விழியின் தவம் போதவில்லை என்றோ!!??

தவிப்பு

தகிக்கிறது உள்ளம் - உன்னை
நீங்கி விலகி நிற்பதால்,
தலைகோத வருவாயா - இல்லை
தலை சாய்ந்ததும் வருவாயா..!!?

Friday, October 5, 2012

பசலை

என்  கோப(வை) கிளியே,
உந்தன் உடல் உருக -
காரணம் மேகம் இல்லை!!

காதலன் தனை பிரியும்,

தலைவிக்கு வரும் இது-
கொடிய நோய் பசலையாம்
!!!

Monday, October 1, 2012

வரம்

வருடம் ஒரு முறை பூஜை,
வாரம் ஒரு முறை விரதம் - இருந்தாய்
வரனாய் நான் வர வேண்டி..!

தமிழில் எண்கள் இல்லை- நான்
தவம் செய்த காலம் உரைக்க - 
வரமாய் தேவதை - நீ வர வேண்டி..!