Sunday, April 22, 2012

மரணம்

நான்கே நாட்களில் - நீ
முற்றிலும் மறந்தாய் - என்
ஏட்டில் எழுதியது - இதோ
சரியாக நடந்தது - இங்கு
நொடியில் மரணம்...!

Saturday, April 14, 2012

மரியாதை

என்னைச் சுட்டி
"அவர் - என்னவர்"
என சொல்வதைக் கேட்பவர்க்குத்
தெரியாது - என் சுட்டிப்பெண்
நீ - எனக்கு தரும் மரியாதை...!

Sunday, April 8, 2012

தண்டனை

குற்றம் புரிந்தவனுக்கு
விசாரித்த பின் - தண்டனை...!
உன்னை விட்டுச் சென்ற
எனக்கு - வேண்டாம் விசாரணை -
உன் மௌனமே தண்டனை....!

Saturday, March 24, 2012

பார்வை

மையல் தரும் உனது
சுட்டும் விழிப் பார்வையை 
ருசிக்க -
கோதையே - எப்போதும் வரும்
வைகறை என காத்திருக்கிறேன்....!

Saturday, March 17, 2012

ஆனந்த அவஸ்தை..!

சொல்வதைக் கேட்பவன் நான்,
அதற்காக - நான்
நினைத்ததையும் நீயே சொல்கிறேன்
என சண்டை இடும் - நீ...!

Sunday, February 19, 2012

சிலேடை 2 : தாமரை

தாமரையே உந்தன்
கண் பார்வைப் பட்டால் -
மயங்குவான் மரை(றை) நாயகன்....!

Monday, February 13, 2012

காதலர் தினம்

 பிப்ரவரி 14 -
காதலர் தினம் -
நான் கொண்டாடுவதில்லை...!

என் காதல் தேவதையே -
இந்த ஜென்மமே நமக்கு
காதலர் தினம் தான் - 
கன நேரமும் மாறாது
நாம் நேசிப்பதால்....!