Sunday, February 19, 2012

சிலேடை 2 : தாமரை

தாமரையே உந்தன்
கண் பார்வைப் பட்டால் -
மயங்குவான் மரை(றை) நாயகன்....!

Monday, February 13, 2012

காதலர் தினம்

 பிப்ரவரி 14 -
காதலர் தினம் -
நான் கொண்டாடுவதில்லை...!

என் காதல் தேவதையே -
இந்த ஜென்மமே நமக்கு
காதலர் தினம் தான் - 
கன நேரமும் மாறாது
நாம் நேசிப்பதால்....!

Thursday, February 2, 2012

விடுகதை

மானிட வாழ்வின் ஆதாரம்,
இருக்கும் இடம் அறிந்து -
உன்னை நீ வடிவமைப்பாய்..!
உந்தன் தன்மை வேண்டும் எங்களுக்கு...!

விளியின் காதல் குழந்தை - நீ..!
உன்னால் தேசங்கள் பிளவுபட்டது...!
உந்தன் மகனோ - தேசங்கள்
தாண்டி காதல் கொள்கிறான்..!

பதில் தாருங்கள் இக்கேள்விகளுக்கு -
தாய் தந்தை யார்...?
காதல் குழந்தையின் பெயர் என்ன?
அவனின் மகன் யார்?
மகனின் காதலி யார்?  

Wednesday, February 1, 2012

எங்கும் நீயே...!

பசியுடன் நான் ஊட்டியில் -
எப்போது ஊட்டி விடுவாய்...?

பந்திப்பூர் சாலையில் நீ -
மானாய் வந்தாய் - நான் 
உருண்டு ஓடினேன் பந்தாய்...!

மடிகேரி சென்றாலும் உன்
மடியின் சுகம் கிட்டவில்லை...!

மைசூரு அரண்மனையில் தேடினேன் 
என் ராணியே உன்னை -
பதில் வந்தது எனக்கு -
மன அரண்மனையில் உள்ளாளென...!

உன்னை எண்ணியே நாட்கள் 
நான்கு ஓடியது - நாம்  
எப்போது ஒன்று கூடுவது..?

Monday, January 16, 2012

காணும் பொங்கல்

இன்றோ அனைவருக்கும் 
காணும் பொங்கல்,
சுந்தரியே -
உன்னைக் காணும் நாள் தான்
எந்தன் உள்ளம் பொங்கும்..! 

Saturday, January 7, 2012

நண்பன்

வாழும் வரை உன்னோடு இருப்பேன் -
என்றுரைக்க இது காதல் இல்லை,
இருக்கும் வரை ஒவ்வொரு அணுவிலும் -
இறந்த பின் நினைவுகளோடும் இருப்பாய் -
நீ என் நண்பனாய்...!

Wednesday, January 4, 2012

செய்கை மொழி

சின்னச் சின்னக் கைகளில்
செய்கையால் பேசுகிறாய் -
உந்தன் அழகைப் பார்த்து - 
ஊமை ஆன என்னிடம்....!