Enthan Kavithai
Sunday, September 10, 2017
பிறந்த நாள்
மலர்களுக்கு பிறந்தாள் ஒருமுறை.
பெண்ணே - ஒவ்வொரு மாதமும்
நீ பூப்பதால் - கொண்டாடுவோம்
மாதம் ஒருமுறை உனது
பிறந்தநாள்.
Sunday, February 14, 2016
அரங்கேற்றம்
மாதங்கள் பல உறக்கம்
இலாது
–
புசிக்க நேரமும்
எண்ணமும் நீங்கி
–
தவம்
போல நான் இருந்தேன்!
அரங்கேற்ற நேரமும் நெருங்க
உள்ளத்திலும் உடலிலும் பெரும்
புயல் வந்து போனது!
மேடை ஏறும் நாள்
நாளை என்றிருக்க
–
இன்று
கலைந்தது எந்தன் தவம்
–
தொடங்காமலே முற்று பெற்றது
–
மேடை ஏறா அரங்கேற்றம்!
Saturday, February 13, 2016
காதலர் தினம்
வருடத்தில் ஒரு முறை
உலகமே கொண்டாடுகிறது - காதலை!
தேவை இல்லை கண்ணே
அனுதினமும் கொண்டாடும் -
நமக்கு!
முத்தமிட்டு, வாழ்த்து சொல்லி
கட்டியணைத்து பரிசில் கொடுத்து
மகிழ்வது தான் காதலா?
மனம் ஒன்றி உணர்வு
ஒன்றி - என்றும் பிரியா
வரம் வேண்டுவதே காதல்!
Sunday, July 27, 2014
உனக்காகவே காத்திருக்கிறேன்!
காதல் கிளியே - விரைவில் வாராய்!
உன்னைக் காண - ஒரு வரம் தாராய்!
வருடங்கள் பல அன்று காத்திருந்தாலும் -
இன்று நொடியும் கூட பிரிந்திட வேண்டாம்!
நீ இல்லாமல் என் நாட்கள் இல்லை -
நீ என்னுடன் இருந்தால் இனி கவலைகள் இல்லை!
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் -
நம் வாழ்கையின் கனி - உன்னிடம் உண்டு!
அதை காணவே பல கண்களும் உண்டு -
காத்திருக்கிறேன் கைகள் ஏந்திக்கொண்டு!
Wednesday, July 16, 2014
பட்டாம்பூச்சி
மாற்றம் -
பட்டுப் புழு - வண்ணத்துபூச்சி - உருவத்தில்
பெண் - தாய் - தகுதியில்!
சிறகு அடிக்கும் -
கூட்டை விட்டு வெளியில் வந்தபின் - பட்டாம்பூச்சி
அன்னையின் வயிற்றில் உள்ளே வந்தவுடன் - எனது சிட்டு!
வண்ணங்களோடு -
வெளி வரும் - பட்டாம்பூச்சி!
வரவேற்போம் - நமது பட்டுக் குட்டியை!
Thursday, February 6, 2014
பிரிவு
அவள் அங்கே
நான் எங்கோ -
கரம் பிடிக்கும் வரை - ஏற்றுக்கொண்டோம்!
இன்றும் அவள் அங்கே
நான் எங்கோ -
தாங்கவில்லை மனது!
பிரிந்து இருப்பது
வாழ்வன்று - பிரிந்தாலும்
புரிந்து இருப்பதே
வாழ்வு!
கடல் தாண்டி
சென்ற தலைவன்
ஆனந்த அலையில்
மிதக்கவில்லை!!
கவலை கடலில்
தவிக்கிறான்!
மது அருந்தினால்
மன அழுத்தம் நீங்கும் -
எந்தன் மதுவே நீ தானே,
என்று என் வேதனை நீங்கும்?
Monday, October 21, 2013
அழைப்பிதழ்
கண்டதும் காதல் - அல்ல
எங்களது காதல்!
காத்திருப்பது அழகு
காதலிற்கு மட்டும் அல்ல -
காதலர்க்கும் தான்!!
காத்திருந்த காலம் பேசும் -
எங்கள் காதல் கதை!!
அக்னியின் முன்
மங்கையின் கரம் பற்றி
மணாளன் சத்தியம் உறைக்க
நல்ல நேரம் வந்தது!
வந்து வாழ்த்த அன்புடன் அழைக்கிறோம்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)