Sunday, October 21, 2012

தவிப்பு

தகிக்கிறது உள்ளம் - உன்னை
நீங்கி விலகி நிற்பதால்,
தலைகோத வருவாயா - இல்லை
தலை சாய்ந்ததும் வருவாயா..!!?

Friday, October 5, 2012

பசலை

என்  கோப(வை) கிளியே,
உந்தன் உடல் உருக -
காரணம் மேகம் இல்லை!!

காதலன் தனை பிரியும்,

தலைவிக்கு வரும் இது-
கொடிய நோய் பசலையாம்
!!!

Monday, October 1, 2012

வரம்

வருடம் ஒரு முறை பூஜை,
வாரம் ஒரு முறை விரதம் - இருந்தாய்
வரனாய் நான் வர வேண்டி..!

தமிழில் எண்கள் இல்லை- நான்
தவம் செய்த காலம் உரைக்க - 
வரமாய் தேவதை - நீ வர வேண்டி..! 

Monday, September 3, 2012

தேவதை

தேவதையே ...!
நீ யார் என்று -
இயற்கை கூட அறியும்...!

பன்னீர் தெளிக்கும் வானம்,
குடை பிடிக்கும் மேகம்,
வரவேற்புத்   தோரணம் வானவில்..!

பாதம் முத்தமிடும் ரோஜா,
பார்த்து  கவிழும் தாமரை,
கன்னம் கடிக்கிறது தேனீ...!!

Sunday, August 19, 2012

ஏமாற்றம்

அவனியை அல்லல்படுத்தி ஆழ்பவன் -
இல்லத்தின் இன்பத்தைப் பருகுபவன் -
உறவுகளைக் கெடுக்கும் உத்தமன் -
எதிர்பார்ப்பின் செல்லக் குழந்தை -
ஏமாற்றம்..!!

Saturday, August 18, 2012

கண்ணாமூச்சி

கண் முன்னே வந்து,
கைத் தொடும் தூரத்தில் நின்று,
கன நொடியில் மறைந்து,
ஆடுகிறாய் - கண்ணாமூச்சி..!!!

Sunday, July 15, 2012

காதல் கனவு

கண்   உறங்கும்  வேளையிலே  காதலியே நீ  தானே,
பின் இரவின் பாதியிலே பஞ்சணையில்  நீ  தானே,
இன்பம் தரும் கனவுகளின் நாயகியும்  நீ  தானே,
கண் விழித்துப் பார்கையிலே கரைவதும் நீ  தானே..!!