கண் உறங்கும் வேளையிலே காதலியே நீ தானே, பின் இரவின் பாதியிலே பஞ்சணையில் நீ தானே, இன்பம் தரும் கனவுகளின் நாயகியும் நீ தானே, கண் விழித்துப் பார்கையிலே கரைவதும் நீ தானே..!!
காயும் சூரியன் - கடுங்குளிர், சுட்டெரிக்கும் மணல் - உறைபனி, பூக்கும் கற்றாழை - உறங்கும் நத்தை, கரையும் பேடை - கூகைக் காற்று, அங்கே நீ - எங்கோ நான், நம் பிரிவால் - இயற்கைக்கும் சோகம்..!
தூரத்தில் மேகம் - விரைந்தோடி வாரும், என்னவளைக் கண்டு - என் தூது சேரும்..! காற்றை வருவேன் - காதலை தருவேன், உன்னைச் சேரும் நாளை உரக்கச் சொல்வேன்...!