அடிகளில் அடிகிட ஆணை!
இனிய நினைவுகளே துணை,
ஈக்களாய் திரிந்த வனத்தில்,
உன்னை கண்டேன் தேனாக!
ஊர் தாண்டி சென்றாலும்
என்றும் வருவேன் விரைந்தோடி!
ஏக்கமே நம்மை இணைத்து
ஐந்தாண்டுகள் கூட்டிச் செல்கிறது!
ஒவ்வொரு நாளும் செய்தோம்
ஓயாமல் காதலும் சண்டையும்!
ஒளடதமே நம் திருமணம்
அஃதே நமது வரம்!
No comments:
Post a Comment