Saturday, December 10, 2011

சிலேடை - பூனையும் என் காதலியும்

குழந்தையாய் அழுவாள்,
தோழியாய் விளையாடுவாள்,
கண்கள் திறந்தால் தான் - (என்) உலகமே இயங்கும்,
எகிப்து தேசத்தின் தலைவியே -
பூசையே உனக்காக...!

1 comment:

  1. விளக்கம் :

    பூனை :

    பூனையின் அழுகை குழந்தையைப் போல் கேட்கும். நம்முடன் விளையாடும். பூனையின் கண்கள் மூடினால் உலகமே இருண்டதாய் நினைக்கும். எகிப்து தேசத்தில் பூனையை தெய்வமாய் வணங்குவார்கள் - அதனால் தலைவி - பூனையே உனக்காக..!

    என் காதலி :
    அவள் குழந்தயாய் சிணுங்குவாள். தோழியாய் விளையாடுவாள். அவள் கண்கள் திறந்தால் தான் என் உலகமே இயங்கும். எகிப்து தேசத்து தலைவி கிளியோபாட்ரா போல் அழகியே, நான் உன்னை பூஜிக்கிறேன் ... :)

    ReplyDelete