Enthan Kavithai
Thursday, February 14, 2013
தவளை
இரட்டை வாழ்கை வாழ்வதால் -
நானும் தவளை தான்!!
கண்ணீர்
மொழிகள் வெளிபடுத்தாத உணர்வை -
மனிதன் புரிந்து கொள்ள -
இறைவன் படைத்த ஒருவன் -
கண்ணீர்!!
வெறுமை
பல இன்னல்களைக் கடந்து,
வேண்டிய அளவு வாடி,
இயன்ற வரை முயன்றும்,
நினைத்தது நிகழவில்லை - விளைவு
"வெறுமை"
ஏக்கம்
உன்னோடு பேசினால்தான் என்
கவிதைக்கு உயிர் பிறக்கிறது!!!
அதற்காக பேசுவதோடு நிற்கிறாயே,
பாவம் என்னுயிர் வாடுகிறது!!!
Sunday, December 16, 2012
காதல் சிறை
கப்பலில் வாடி,
கடலில் தேடினேன்,
காதல் கன்னியை..!
திக்கு தெரியாமல்,
பித்தென ஆனேன்,
அவளைக் காணாமல்..!
தூரத்தில் விடிவெள்ளி,
மின்னியது அவளொளி,
பின்தொடர்ந்தேன் அவளை..!
கரையைச் சேர
வழியில்லை- சிறையில்
எந்தன் தேவதை..!
மாயனவன் பிடியினை
நீக்க மன்னன் -
நான் வருகிறேன்..!
சிறை மீட்கும்
நேரம்வரை - காத்திரு
சின்ன பெண்ணே..!
Friday, November 23, 2012
காதல் சுவை
கடல் நீரில் பிறந்த
உப்பு - உவர்க்கும் கல்வி பாடத்தில்,
உன் வியர்வையில் பூத்த
உப்போ - இனிக்கிறது நம் காதல் பாடத்தில்..!
தூரம்
நம் இருவருக்கும் இடையில்
பல்லாயிரம் மையில்கள் - கொடிதன்று,
பேசாமல் அமைதியாய் கழியும்
கன நொடி நேரம் -
கொடிதினும் கொடிது..!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)