காயும் சூரியன் - கடுங்குளிர்,
சுட்டெரிக்கும் மணல் - உறைபனி,
பூக்கும் கற்றாழை - உறங்கும் நத்தை,
கரையும் பேடை - கூகைக் காற்று,
அங்கே நீ - எங்கோ நான்,
நம் பிரிவால் -
இயற்கைக்கும் சோகம்..!
தூரத்தில் மேகம் -
விரைந்தோடி வாரும்,
என்னவளைக் கண்டு -
என் தூது சேரும்..!
காற்றை வருவேன் -
காதலை தருவேன்,
உன்னைச் சேரும் நாளை
உரக்கச் சொல்வேன்...!