Sunday, July 27, 2014

உனக்காகவே காத்திருக்கிறேன்!

காதல் கிளியே - விரைவில் வாராய்!
உன்னைக் காண - ஒரு வரம் தாராய்!

வருடங்கள் பல அன்று காத்திருந்தாலும் -
இன்று நொடியும் கூட பிரிந்திட வேண்டாம்!
நீ இல்லாமல் என் நாட்கள் இல்லை -
நீ என்னுடன் இருந்தால் இனி கவலைகள் இல்லை!

உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் -
நம் வாழ்கையின் கனி - உன்னிடம் உண்டு!
அதை காணவே பல கண்களும் உண்டு -
காத்திருக்கிறேன் கைகள் ஏந்திக்கொண்டு!

Wednesday, July 16, 2014

பட்டாம்பூச்சி

மாற்றம் -
பட்டுப் புழு - வண்ணத்துபூச்சி - உருவத்தில்
பெண் - தாய் - தகுதியில்!

சிறகு அடிக்கும் -
கூட்டை விட்டு வெளியில் வந்தபின் - பட்டாம்பூச்சி 
அன்னையின் வயிற்றில் உள்ளே வந்தவுடன் - எனது சிட்டு!

வண்ணங்களோடு -
வெளி வரும் - பட்டாம்பூச்சி!
வரவேற்போம் - நமது பட்டுக் குட்டியை!


Thursday, February 6, 2014

பிரிவு

அவள் அங்கே 
நான் எங்கோ -  
கரம் பிடிக்கும் வரை - ஏற்றுக்கொண்டோம்!

இன்றும் அவள் அங்கே 
நான் எங்கோ -
தாங்கவில்லை மனது!

பிரிந்து இருப்பது 
வாழ்வன்று - பிரிந்தாலும் 
புரிந்து இருப்பதே  
வாழ்வு!

கடல் தாண்டி 
சென்ற தலைவன் 
ஆனந்த அலையில் 
மிதக்கவில்லை!!
கவலை கடலில் 
தவிக்கிறான்!

மது அருந்தினால் 
மன அழுத்தம்  நீங்கும் - 
எந்தன் மதுவே  நீ தானே,
என்று என் வேதனை நீங்கும்?

Monday, October 21, 2013

அழைப்பிதழ்

கண்டதும் காதல் - அல்ல
எங்களது காதல்!

காத்திருப்பது அழகு
காதலிற்கு மட்டும் அல்ல -
காதலர்க்கும் தான்!!

காத்திருந்த காலம் பேசும் -
எங்கள்  காதல் கதை!!

அக்னியின் முன்
மங்கையின் கரம் பற்றி 
மணாளன் சத்தியம் உறைக்க
நல்ல நேரம் வந்தது!

வந்து வாழ்த்த அன்புடன் அழைக்கிறோம்!

Tuesday, September 10, 2013

மலரும் நானும்

பிறந்த நேரம் -
உன்னுடனில்லை!
பூத்த தருணம் -
அறிந்திருக்கவில்லை!

மணம் கொண்ட
மலரே - என்னைக் கட்டி
இழுத்தாய்!

வந்தவன் உண்ண -
தேன் கொண்டு
தந்தாய்!

தேன் உண்ட
போதை - நான்
மயங்கி நின்றேன்!

தேன் அல்ல போதை -
தந்தவள் நீ தான் போதை!!

தெளிந்ததும் அறிந்தேன் -
வாழ்வின் அமிழ்தம்
நீ தான் என்று!

மலர் விட்டு மலர்
நான் தாவ மாட்டேன்!!
உயிர் கொண்ட பூவே
உன்னை நீங்க மாட்டேன்!!

மடல் மடக்கி என்னை -
உன்னோடு சேர்த்து,
உடல் கொண்ட வினையை
பூரணம் செய்து -
உயிர் மோட்சம் தருவாய்!!

Friday, July 12, 2013

விழிச்சிறை

காதலி கண்ணில்
கரு மை கரைக்க -
காதலன் கட்டுண்டு 
கிடக்கிறேன் கண்ணியின் 
கருவிழியில்!!


  

Tuesday, July 2, 2013

தனிமை

உன்னை உன்னகே
அறிமுகம் செய்யும்
உடன்பிறப்பு!!

கருவறை முதல்
கல்லறை வரை
பயணத்தோழன்!!

எவன் விட்டுச்
சென்றாலும் இவன்
பிரியாதிருப்பவன்!! 

அவள் இல்லாத
காரணமோ எனக்கு
இந்தக் கொடுமை - தனிமை!!!