Friday, March 1, 2013

கற்பனை

நிகழ இயலா காட்சி
தேவதை கதைகளில் அழகு -
அழகு இல்லை தேவதை
உனது சொல்லிற்கு..! 

Monday, February 18, 2013

கோரிக்கை

தவம் செய்ய காலமில்லை -
   உன்னைப் பிரிய நேர்வதால்,

காகிதத்தில் எழுதி அனுப்பினேன் -
   ஆண்டவனிடம் ஒரு கோரிக்கை,

பின் வரும் பிறவியில் -
   தஞ்சையில் பிறக்க வேண்டி,

தலையாட்டி பொம்மையாய் நான் -
   நீ சொல்வதை கேட்க!!!!

Thursday, February 14, 2013

தவளை

இரட்டை  வாழ்கை வாழ்வதால் -
நானும் தவளை தான்!!

கண்ணீர்

மொழிகள் வெளிபடுத்தாத உணர்வை -
மனிதன் புரிந்து கொள்ள -
இறைவன் படைத்த ஒருவன் -
கண்ணீர்!!

வெறுமை

பல இன்னல்களைக்  கடந்து,
வேண்டிய அளவு வாடி,
இயன்ற வரை முயன்றும்,
நினைத்தது நிகழவில்லை - விளைவு 
"வெறுமை"

ஏக்கம்

உன்னோடு பேசினால்தான் என்
கவிதைக்கு உயிர் பிறக்கிறது!!!
அதற்காக பேசுவதோடு நிற்கிறாயே,
பாவம் என்னுயிர் வாடுகிறது!!!



Sunday, December 16, 2012

காதல் சிறை

கப்பலில் வாடி,
கடலில் தேடினேன்,
காதல் கன்னியை..!

திக்கு தெரியாமல்,
பித்தென ஆனேன்,
அவளைக் காணாமல்..!

தூரத்தில் விடிவெள்ளி,
மின்னியது அவளொளி,
பின்தொடர்ந்தேன் அவளை..!

கரையைச் சேர
வழியில்லை- சிறையில் 
எந்தன் தேவதை..!

மாயனவன் பிடியினை 
நீக்க மன்னன் -
நான் வருகிறேன்..!  

சிறை மீட்கும் 
நேரம்வரை - காத்திரு
சின்ன பெண்ணே..!